வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக சில ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். எப்போதுமே சண்டைக் காட்சிகளில் தானே நடிப்பது அஜித்தின் வழக்கம். இப்படி ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பில் கூட காரில் தாவும் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு அஜித், ஒரு முக்கியமான ஆபரேஷன் ஒன்றை செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அஜித் அந்த ஆபரேஷனை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார் என்றார்கள்.
இந்த நிலையில் தற்போது நடித்து வரும் படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது கழுத்துப் பகுதியில் அஜித்துக்கு அடிபட்டிருக்கிறது. வலி தாங்காமல் அவதிப்பட்ட அஜித்துக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் அஜித்தை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி கேட்டுள்ளார்கள். ஆனால், தயாரிப்பாளருக்கு படப்பிடிப்பு ரத்தானால் பல லட்சம் ரூபாய் வீணாகும் என்பதைக் கருத்தில் கொண்ட அஜித் வலியையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்துள்ளார். வலியையும் மீறி அஜித் சண்டைக் காட்சியில் நடித்ததை உடன் நடித்தவர்கள் அஜித்தின் தொழில் பக்தியைக் கண்டு வியந்ததாக படப்பிடிப்பு வட்டாரங்களிலிருந்து நமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன
0 comments:
Post a Comment