ராதிகா சரத்குமார் தயாரிப்பில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்து இரு தினங்களுக்கு முன் வெளியான படம் மாரி . வாயை மூடி பேசவும் படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான மாரி படத்திற்கு எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, படம் வெளியானதும் அப்படியே தலைகீழாக மாறிப்போனது.
மாரி வெளியான தினத்தில் முதல்காட்சி முடிந்த உடனேயே இப்படத்திற்கு நெகட்டீவான விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டன. இன்றுவரை அது ஓயவில்லை என்றாலும் வழக்கமாக தனுஷ் நடித்த படத்திற்கு எந்தளவுக்கு நல்ல ஓபனிங் இருக்குமோ அதே அளவு ஓப்பனிங் மாரிக்கும் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல, தனுஷ் நடிப்பில் இதற்கு முன் வெளியான படங்களை விட இப்படம் முதல் நாளில் நல்ல வசூலை அள்ளியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
மாரி படம் வெளியான முதல் நாள் தமிழகத்தில் மட்டும் மாரி 6.50 கோடி வசூல் செய்ததாகவும், அடுத்த நாள் 5 கோடி வசூல் செய்துள்ளதாக கணக்கு சொல்கிறார்கள். மாரி படத்துக்கு ரிப்போர்ட் நெகட்டடிவ்க இருந்ததால் கவலையில் இருந்த மாரி படக்குழுவினர் தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலை அள்ளியிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவர்களின் மகிழ்ச்சி வரும் நாட்களிலும் நீடிக்குமா?
0 comments:
Post a Comment