ஏற்கனவே வசூல் சாதனை படைத்துள்ள 'பாகுபலி', தற்போது ஐந்தே நாட்களில் ரூ.200 கோடி
வசூலைக் கடந்து மற்றொரு சாதனையை படைத்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'பாகுபலி'
திரைப்படம் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று
வசூலை அள்ளி வருகிறது.
இது குறித்து பேசிய வர்த்தக ஆய்வாளர் த்ரிநாத், "குறைந்த நாட்களில் 200
கோடி ரூபாய் வசூலை பெற்ற இந்தியப் படம் என்ற சாதனையை பாகுபலி படைத்துள்ளது.
செவ்வாய் கிழமை வசூலோடு சேர்த்து ரூ.215 கோடியை பாகுபலி பெற்றுள்ளது.
வாரநாட்களிலும் வசூலில் பெரிய வீழ்ச்சி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது"
என்றார்.
ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 'பாகுபலி', தமிழ், தெலுங்கு,
மலையாளம், இந்தி என 4 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி அனைத்து
மொழிகளிலுமே ஹிட்டாகியுள்ளது.
வெளிநாடுகளிலும் 'பாகுபலி' சிறந்த வரவேற்பைப் பெற்று, 'ஹாப்பி நியூ இயர்',
'பிகே' ஆகிய திரைப்படங்கள் பெற்ற வெளிநாட்டு வசூல் சாதனையை
முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment