வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் சிவாவுடன் இணைந்துள்ளார் நடிகர் அஜித். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்தமாதம் சென்னையில் துவங்கியது. அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசனும், அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனனும் நடிக்கிறார்கள். கடந்தமாதம் அஜித், லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது அஜித்-ஸ்ருதி சம்பந்தப்பட்ட காட்சிகள் இத்தாலியில் படமாகி வருகின்றன. படப்பிடிப்புகள் வேகமாக வளர்ந்து வருகிறது. தீபாவளி ரிலீஸாக இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை அக்டோபர் 1ம் தேதியும், படத்தின் இசையை அக்டோபர் மாத இறுதியிலும் வௌியிட இருக்கின்றனர். இதற்கு முன்பாக படத்தின் தலைப்பை ஆகஸ்ட் மாதம் அறிவிக்க இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment