தல அஜித்திற்காக, கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும், ஆனால், என்னால் அவரை சந்திக்க முடியுமா என்பது தெரியவில்லை என்று அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா" படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியிருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
சினிமா இணையதளம் ஒன்றி்ற்கு, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம், விரைவில் வெளியாக உள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தனர். புதுப்படம் பண்ணுகிறோம் என்ற பதட்டமே இல்லாமல் முதல் படத்தை முடித்துவிட்டேன். படமும் சிறப்பாக வந்துள்ளது. படம், இளைய தலைமுறையினரை மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும் என்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, நான் தல அஜித்தின் தீவிர ரசிகன். அவரது எல்லா படங்களையும் பார்த்துள்ளேன். அஜித்திற்காக, கதையை தயார் செய்து வைத்துள்ளேன். ஆனால், என்னால் அவரை சந்திக்க முடியுமா என்பது தெரியவில்லை. அவர் மட்டும் என்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால், அதையே பெரும்பாக்கியமாக கருதுவேன் என்று ஆதிக் ரவிச்சந்திரன் கூறினார்.
சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய இயக்குநர் சிவாவின் இயக்கத்திலான படத்தி்ல், தற்போது நடித்து வரும் அஜித், அறிமுக இயக்குநரின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்......
0 comments:
Post a Comment