சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில், நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த வாலு படம் வரும் வெள்ளிக்கிழுமை அதாவது ஜூலை 17- ஆம் தேதி வெளியாவிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனதால் பொறுமை இழந்த டி.ராஜேந்தர், வாலு படத்தை தன்னுடைய சிம்பு சினி ஆர்ட்ஸ் பேனரில் வெளியிட முடிவு செய்தார்.
கடந்த சில மாதங்களாக இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தார் டி.ராஜேந்தர். ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தும், இம்முறை டி.ராஜேந்தரே ரிலீஸ் செய்வதால் படம் நிச்சயம் ரிலீஸ் ஆகும் என்ற நம்பிக்கையில் பல தியேட்டர்களில் வாலு படத்தின் பேனர்களை வைத்திருந்தனர்.
இந்நிலையில், "தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு 10 கோடி ரூபாய்க்கு தருவதாக 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். எனவே வாலு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேஜிக் ரேஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி வாலு படத்தை வெளியிட தடை விதித்தார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஜூலை 17 ஆம் தேதி அன்று வாலு படம் வெளியாகாது என்பது உறுதியாகி விட்டது. எனவே நேற்று வரை தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த வாலு பட பேனர்களை அகற்றிவிட்டனர். தற்போது அந்த இடத்தில் தனுஷ் நடிக்கும் மாரி படத்தின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

0 comments:
Post a Comment