இது நம்ம ஆளு 131 நிமிடத்துக்கு படம் ரெடி

இது நம்ம ஆளு 131 நிமிடத்துக்கு படம் ரெடி




சிம்பு நடிப்பில் வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கும் வாலு படம் இம்மாதம் 17 அன்று வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.

ஜூலை 17 அன்று வாலு படம் வெளியாகிவிட்டால் சிம்பு நடித்த மற்ற படங்களும் அடுத்தடுத்து வெளிவர வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, இது நம்ம ஆளு படம்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு சினிமா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

நிஜத்திலும் காதலர்களாக இருந்த சிம்புவும் நயன்தாராவும் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றனர். பல வருட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்த நடிப்பதால் இந்த காம்பினேஷனை வைத்து இது நம்ம ஆளு படத்தை பெரிய அளவில் பேச வைத்தனர். சிம்புவின் தாமதத்தினால் இது நம்ம ஆளு படம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போதைய நிலவரம் என்ன? டிரெய்லரை எடிட் பண்ணி முடித்துவிட்ட பாண்டிராஜ் படத்தையும் எடிட் பண்ணி வைத்துவிட்டாராம். இரண்டு பாடல்காட்சிகளை சேர்க்காமல் 131 நிமிடத்துக்கு படம் ரெடி. இரண்டு பாடல் காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டால் படம் ரெடியாகிவிடும். எப்போது எடுக்கப்படவிருக்கிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
Share on Google Plus

About Admin

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment