தமிழில் 'நேரம்' படத்தில் நஸ்ரியா அறிமுகமானார். ஆர்யாவுடன் 'ராஜா ராணி', தனுசுடன் 'நய்யாண்டி', ஜெய்யுடன் 'திருமணம் எனும் நிக்ஹா' படங்களில் நடித்துள்ளார். ரஞ்சனி ஹரிதாஸ் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
நஸ்ரியாவும், மலையாள நடிகர் பகத் பாசிலும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் நஸ்ரியா நடிக்கவில்லை. நஸ்ரியா ஏற்கனவே காரில் சென்று இன்னொரு காரில் மோதி நடு ரோட்டில் சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கினார்.
இப்போது இன்னொரு பிரச்சனையிலும் மாட்டி உள்ளார். நஸ்ரியாவும், ரஞ்சனியும் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானையில் இரண்டு குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சவாரி செய்தனர். அந்த படங்கள் இணைய தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. நஸ்ரியா, ரஞ்சனி மீது விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் திருச்சூரில் உள்ள பிராணிகள் நல வாரியத்திடம் புகார் செய்துள்ளார்.
அதில் 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4–ந் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி பிராணிகள் நல வாரியத்தின் அனுமதி பெறாமல் யானைகள் மீது சவாரி செய்வது குற்றமாகும். ஆனால் நஸ்ரியாவும், ரஞ்சனியும் பிராணிகள் வாரியத்தில் அனுமதி பெறாமல் யானை மீது சவாரி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிராணிகள் நல வாரிய அதிகாரிகள் இது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளனர். நஸ்ரியா, ரஞ்சனி மற்றும் அவர்களை யானை சவாரிக்கு அனுமதித்த வனத்துறை ஊழியர்கள் போன்றோரிடம் விசாரணை நடக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவரும் கைதாகலாம் என கூறப்படுகிறது. இதனால் இருவரும் தவிப்பில் உள்ளனர்.
0 comments:
Post a Comment