சினிமா நட்சத்திரங்களுக்காக தியேட்டரில் விசில் அடிக்கும் ரசிகர்களையும், தியேட்டர் வாசலில் கொடி, தோரணம் கட்டுகிற ரசிகர்களையும், சொந்தக்காசில் போஸ்டர் அடித்து ஒட்டுகிற ரசிகர்களையும் பார்த்திருப்போம். எல்லாக்காலங்களிலும் இப்படிப்பட்ட ரசிகர்கள்தான் சினிமா நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளனர்.
எதிர்காலத்திலும் இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கவேசெய்வார்கள். கூடுதலாக இன்னொரு வகையான ரசிகர்களும் நட்சத்திரங்களுக்கு தேவைப்படுகிறார்கள்.
அதாவது, ஃபேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் நட்சத்திரங்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிடவும், தன் அபிமான நடிகரின் படத்தின் விளம்பர போஸ்டரை ஆன்லைனில் ஒட்டுகிற வேலையைச் செய்யவும், போட்டியாளர்களான மற்ற நடிகர்களை வறுத்தெடுக்கவும் ரசிகர்கள் தேவைப்படுகிறார்கள்.
சுருக்கமாக சொல்வதென்றால் இப்படிப்பட்ட ரசிகர்களின் தேவைதான் நட்சத்திரங்களுக்கு அவசியமாக இருக்கிறது.
நமக்குக் கிடைத்ததகவலின்படி, ஃபேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அதிகபட்சமாக அஜித்துக்குத்தான் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் சுமார் 2000 ரசிகர்கள் படுசுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர்.
அடுத்த இடம் சிவகார்த்திகேயனுக்கு. இவரது ரசிகர்களில் சுமார் 1500 பேர் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
1500 பேரில் சரிபாதி பேர் சிவகார்த்திகேயனை அண்ணன் என்று குறிப்பிடும் ட்விட்டர் தங்கைகள்.
விஜய் ரசிகர்களில் சுமார் 1000 பேர் ஆக்டிவ்வாக உள்ளனர்.
சூர்யாவுக்கு 500 தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
தனுஷ், சிம்புவுக்கு சுமார் 300 ரசிகர்கள் உள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் கொள்கை பரப்பும் ரசிகர்கள் இருப்பதால்தான் அஜித் படங்கள் மற்றும் அவரைப்பற்றிய செய்திகள் அடிக்கடி டிரெண்டிங்கில் வருகின்றன.
0 comments:
Post a Comment