ரமலான் மாதத்தை முன்னிட்டு, 100 இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து அளித்துள்ளார் நடிகர் விஜய். சிம்புதேவனின் ''புலி'' படத்தை முடித்துவிட்ட விஜய், அடுத்தப்படியாக அட்லீ இயக்கத்தில், புதிய படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளன.
...
இந்நிலையில் தற்போது இஸ்லாமியர்களின் முக்கியமான மாதமான ரமலான்மாதம் நடந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நோன்பு ஏற்பது வழக்கம். இப்படி நோன்பு ஏற்பவர்களுக்கு நமது மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் இப்தார் விருந்தளிப்பது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட முதல்வர் ஜெயலலிதா இப்தார் விருந்தளித்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யும் இப்தார் விருந்து அளித்துள்ளார். 100
இஸ்லாமிய சகோதரர்களுக்கு அவர் இப்தார் விருந்து வைத்தார். கூடவே விஜய்யும்
அவர்களுடன் சேர்ந்து விருந்தை ஏற்று கொண்டார்.
0 comments:
Post a Comment