ஜூலை - 10 ஆம் தேதி அன்று உலகம் முழுக்க வெளியாகி அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது - பாகுபலி . இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய பட்ஜெட்டில் அதாவது 250 கோடி செலவில் உருவான படம் என்பதே பாகுபலி க்கான பப்ளிசிட்டியாக அமைந்தது. அதுவே மிகப்பெரிய மவுத்டாக்கை பரப்பியதுடன் இந்த படம் வசூலிலும் பெரிய சாதனை படைக்கக் காரணமாக அமைந்தது.
இப்படம் வெளியாகி 7 நாட்களில் மட்டும் 265 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சொல்கிறார்கள். இதுவரை தென்னிந்திய சினிமாவில் வெளியான எந்த ஒரு படமும் இவ்வளவு வசூலை அள்ளியது இல்லை என்றும் சொல்கிறார்கள்.
ஒரு வாரத்திலேயே தயாரிப்பு செலவை விட அதிகம் வசூல் செய்து சாதனை படைத்துள்ள இப்படம் இனி வரும் நாட்களில் மேலும் பல கோடிகளை அள்ளப்போவது நிச்சயம். இது பாகுபலி படத்தின் ஒட்டுமொத்த வசூல் சாதனை. பாகுபலி படத்தின் தமிழ்ப்பதிப்பும் நேரடி தமிழ்ப்படங்களில் சாதனைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ் வெர்ஷன் மட்டுமே இதுவரை சுமார் 20 கோடிக்குமேல் வசூல் செய்திருக்கிறது. இப்படத்தை வெளியிட்ட ஞானவேல்ராஜாவுக்கு, பெருத்த லாபத்தை கொடுத்திருக்கிறது பாகுபலி. மாஸ் படத்தினால் அடைந்த நஷ்டத்திற்கு ஆறுதலாக, இந்த லாபம் கிடைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment