‘மாரி’ படம் தெலுங்கு, இந்தியில் டப் செய்யப்படுகிறது என்று தனுஷ் கூறினார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சீரியஸ் படங்களில் நடித்த எனக்கு மாஸ் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. அது ‘மாரி’ மூலம் தீர்ந்திருக்கிறது.
இந்தப் படம் தெலுங்கு, இந்தியிலும் டப் ஆகிறது. இதில் லோக்கல் தாதாவாக நடித்திருக்கிறேன்.அனிருத்தும், நானும் இணைந்தால் வெற்றி என்கிறார்கள்.
எங்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி அப்படி. சின்ன வயதிலிருந்தே பழகி வருகிறோம். டியூன் சரியில்லை என்றால் வெளிப்படையாக சொல்வேன். உடனே மாற்றிக் கொள்வார்.
நான் எழுதும் வரிகள் சரியில்லை என்று அவர் சொன்னால், அதை மாற்றிவிடுவேன். இதுபோன்ற கருத்துப் பரிமாற்றமும், புரிந்துகொள்ளும் தன்மையும் இருப்பதால் ஜாலியாகப் பணிபுரிகிறோம்.நான், இயக்குனர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவன். எனக்கும் படம் இயக்கும் ஆசை இருக்கிறது
சில வருடங் களுக்குப் பிறகு இயக்கலாம். அதுவரை நடிப்பில் கவனம் செலுத்துவேன். சினிமா சிரமமான துறை. இங்கு போட்டி அதிகம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹீரோ அல்லது ஹீரோயின் தலைவிதி மாறுகிறது. இப்படிப்பட்ட துறையில் என்னை முன்னிறுத்தவும், திறமைகளை வெளிப்படுத்தவும் உஷாராக இருக்க வேண்டியிருக்கிறது. எனக்கு பொது அறிவு குறைவு.
படத்தின் ஸ்கிரிப்ட்டில் சொல்லியிருப்பதை மட்டுமே செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.சரத்குமார், விஜய் யேசுதாஸ், அனிருத், இயக்குனர் பாலாஜி மோகன் உடனிருந்தனர்.
0 comments:
Post a Comment