இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த ‘டார்லிங்’ சில மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அவர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பாட்ஷா என்கிற ஆண்டனி’ என டைட்டில் வைக்க எண்ணினார். ஏற்கனவே ரஜினி நடிப்பில் ‘பாட்ஷா’ வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதில் வில்லனாகநடித்த ரகுவரன் தீவிரவாதி ஆண்டனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
‘பாட்ஷா என்கிற ஆண்டனி’ டைட்டிலுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அனுமதி கேட்டிருந்தார் ஜி.வி.பிரகாஷ். ஏற்கனவே விஜய் நடித்த படத்துக்கு ‘காவல்காரன்’ பெயர் வைக்க அனுமதிகேட்டபோது அந்நிறுவனம் அனுமதி தர மறுத்துவிட்டது.
அதேபோல் தற்போது ‘பாட்ஷா’ டைட்டிலுக்கு அனுமதி தர மறுத்துவிட்டது. இப்படத்தின் 2ம் பாகம் தயாரிக்க உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ரஜினி நடிக்க சம்மதித்திருக்கிறாரா என்பதுபற்றி தகவல் வெளியாகவில்லை.
தற்போது ரஞ்சித் இயக்கும் படத்திலும் இதையடுத்து ஷங்கர் இயக்கும் ரோபோ 2ம் பாகத்திலும் ரஜினி நடிக்க உள்ளார். ‘பாட்ஷா’ 2ம் பாகம் உருவாகப்போகிறது என்ற தகவல் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
0 comments:
Post a Comment