ஆன்லைனில் அஜித்தின் ரசிகர்களே நிறைந்திருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள் மிகவும் குறைவு என்று சொல்லப்பட்டு வந்ததை பொய்யாக்குவதுபோல் அடுத்தடுத்து அதிசயங்கள் நடைபெறுகின்றன. விஜய் நடித்துவரும் 'புலி' படத்தின் ஃபர்ஸ்ட் டீஸர் ஜூன் 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பிறகு புலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் எகிறிக் கொண்டே போனது. முதல்நாளிலேயே 10 லட்சம் பார்வையாளர்களைப்பெற்றதோடு, தினமும் புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது புலி டீஸர்.
கடந்த சில தினங்களுக்கு முன் 50 லட்சம் பார்வையாளர்கள் என்ற சாதனையையும் படைத்தது. 18 நாட்களில் 'புலி' டீஸரை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. இதன் மூலம் அஜித்தின் 'என்னை அறிந்தால்', 'லிங்கா' பட டீஸர், டிரைலர் சாதனைகளை முறியடித்திருக்கிறது 'புலி' டீஸர்.
ஷங்கரின் 'ஐ' பட டீஸர்/டிரைலருக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் பார்வையிடப்பட்ட டீஸர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது 'புலி' டீஸர். அஜித்தின் 'என்னை அறிந்தால்' டீஸரை 53 லட்சத்திற்கு மேற்பட்டோரும், 'லிங்கா' டிரைலரை 52 லட்சத்திற்கு மேற்பட்டோரும் இதுவரை பார்த்திருக்கின்றனர்.
இந்த இரண்டு சாதனைகளையும் தற்போது முறியடித்திருக்கிறது 'புலி' டீஸர். ஐ படத்தின் டீஸரை 1 கோடியே 11 லட்சம் பேரும், ஐ படத்தின் டிரைலரை 85 லட்சம் பேரும் கண்டுகளித்துள்ளதே தமிழ்சினிமாவைப் பொருத்தவரை அதிகபட்ச சாதனையாக உள்ளது. தற்போது ரஜினி, அஜித்தை முந்தி 'புலி' விஜய் 3 ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment