ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சுதீப், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள படம் ‘பாகுபலி’. படத்திற்கு இசை கீரவாணி. இந்த படத்தின் பிரம்மாண்ட போர் காட்சிகளும், மேக்கிங்கும் என ஹாலிவுட்டின் ‘தி ஹோப்பிட்’, ‘தி லார்ட் ஆஃப் த ரிங்’ அளவிற்கு ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
இந்த படம் இன்று உலகம் முழுக்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது. எனினும் துபாயில் தமிழ் ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றமாகியிருக்கிறது. துபாயின் பல திரையரங்குகளில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வெளியாகியிருப்பதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இதுகுறித்து துபாயின் ரசிகர் பாலசந்திரன் என்பவர் கூறுகையில், பாகுபலி படத்தைக் காண வெகு நாட்களாக காத்திருந்து டிக்கெட்டுகளை புக் செய்தேன். ஆனால் படம் இன்று காலை காட்சிகள் போடவில்லை. அதேபோல் இப்போதும் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே வெளியாகியுள்ளது.
தமிழில் காண வேண்டும் என காத்திருந்த பலரும் ஏமாற்றத்துடன் டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுச் சென்றுள்ளனர். என்னைப் போன்ற பலர் பரவாயில்லை என தெலுங்கு மற்றும் இந்தியில் பார்த்துவருகிறோம் எனக் கூறினார்.மேலும் 10.30 மணிக் காட்சிகளும் இல்லாமல் பணம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கே தமிழ் பிரிண்டுகள் வரவில்லை என்ற நிலையில் துபாயில் இருக்கும் தமிழ் மக்கள் ஆர்வமாக படம் பார்க்க எண்ணிய பலருக்கும் படத்தைக் காணும் வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.
0 comments:
Post a Comment