திரிசூல வியூகம் - காப்பி அடித்தாரா ராஜமௌலி ?

பாகுபலி  படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பும், வசூலும் குவிகிறதோ அதே அளவிற்கு படத்தைப் பற்றிய விமர்சனங்களும் குவிந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால், வசூல், கோடிகள் என வரும் செய்திகளால் படத்தைப் பற்றிய நெகட்டிவான செய்திகள் அதிகம் எடுபடாமல் இருக்கின்றன. ஏற்கெனவே படத்தில் அனுஷ்காவின் மேக்கப் பற்றி சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். அதே போல, தமன்னாவின் பாடலும் அவருடைய கதாபாத்திரமும் விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது

பாகுபலி  படத்தின் சில காட்சிகளை ஹாலிவுட் படங்களிலிருந்து ராஜமௌலி காப்பியடித்திருக்கிறார் என்ற கருத்து இப்போது எழுந்துள்ளது. படத்தில் மகிழ் மதி பேரரசிற்கும் காலகேயர்களுக்கும் நடைபெறும் போரில் காலகேயர்களை வீழ்த்துவதற்காக  திரிசூல வியூகம் ஒன்று அமைக்கப்படும். அதாவது, போரில் எதிரிகளை நேரெதிராக நின்று ஒரு புறம் தாக்க, மறு புறம், சுற்றி வளைத்து இரு புறமும் தாக்குதல் நடத்துவதை  திரிசூல வியூகம்  என படத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். இந்தக் காட்சி ஹாலிவுட் படமான  அலெக்சான்டர்  படத்திலிருந்து ராஜமௌலி காப்பியடித்திருக்கிறார் என தற்போது தகவல்கள் பரவி வருகிறது. அது மட்டுமல்ல, “ரெட்கிளிஃப், கன்பூஷியஸ், 300, ட்ராய்” போன்ற படங்களிலிருந்தும் சில காட்சிகளை சுட்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

காப்பியடித்து எழுதினாலும் நல்ல மார்க்கை வாங்கி கோடிகளைச் சேர்த்து வருகிறது  பாகுபலி . ஒரு படம் வெளிவந்ததும் தற்போது அந்தப் படத்தின் காட்சிகள் எந்தப் படத்திலிருந்து சுடப்பட்டிருக்கிறது என்பதை கண் கொத்திப் பாம்பாகப் பார்த்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிடுகிறார்கள்
Share on Google Plus

About Admin

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment