டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நாயகனாக நடித்துள்ள ஸ்ரீமந்துடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பழம்பெரும் நடிகரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, பிரபல நடிகர் வெங்கடேஷ், டோலிவுட் வெற்றிப்பட இயக்குநர்கள் விவி விநாயக், ஸ்ரீனு வைட்டாலா, ஸ்ரீகாந்த் அடல்லா ஆகியோருடன் மகேஷ் பாபு ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மகேஷ் பாபு இறுதியாகத் தான் நடித்த நம்பர் 1 திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றி விட்டதால் அதற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மகேஷ் பாபுவின் பிறந்த நாளை (ஆகஸ்ட் 9) முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தனது பிறந்தநாள் பரிசாக அமையும் என மகேஷ் பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மிர்ச்சி எனும் வெற்றி படம் கொடுத்த இயக்குநர் கோரடலா சிவா இயக்கும் இப்படத்தில் முதன் முறையாக நடிகை ஸ்ருதிஹாசன் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்கின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment