அஜித்தின் பைலட் அவதாரம்!



      நடிகர் அஜித்குமார், நடிப்பு மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்து வருகிறார். முக்கியமாக சமையல் கலையில் அவர் ஒரு ஸ்பெசலிஸ்ட். தனது வீட்டு நபர்கள் மட்டுமின்றி தன்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கும் அவ்வப்போது புதுமையான உணவுகளை சமைத்து பரிமாறி வருகிறார்.




மேலும், பைக், கார் ரேஸ் வீரான அஜித், தான் ஒரு புகைப்பட கலைஞர் என்பதை சமீபத்தில் நடிகர் அப்புக்குட்டிக்கு போட்டோ எடுத்து நிரூபித்தார். அது மட்டுமின்றி, ஒரு காலத்தில் சிறிய ரக விளையாட்டு விமானங்களை பறக்க விட்டு வந்தர் அஜித். அந்த விமானம் ஒன்றின் விலை 2 ஆயிரம் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டது.




 ஆனால், அப்படி விளையாட்டு விமானங்களை பறக்க விட்ட வந்த அஜித், நிஜத்தில் ஒரு பைலட்டாம். இந்த தகவலை அஜித் இதுவரை வெளியில் சொன்னதில்லை என்றபோதும், அவரிடம் பைலட்டுக்கான லைசென்ஸ் இருக்கிற விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. ஆக, இதுவரை தரையில் பறந்து கொண்டிருந்த அஜித், விரைவில் விமானத்தில் பைலட்டாக பறப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

.
Share on Google Plus

About Admin

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment