'
லிங்கா' படத்துக்கு பின் சில மாதங்கள் ஓய்வில் இருந்த ரஜினி தற்போது புது படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இந்த படத்தை ரஞ்சித் இயக்குவதாகவும், கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ரஞ்சித் ஏற்கனவே அட்ட கத்தி, மெட்ராஸ் படங்கள் எடுத்து பிரபல மானவர். இவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். தாதா கேரக்டரில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. நயன்தாரா, அனுஷ்கா, தீபிகா படுகோனே, சோனாக்சி சின்ஹா என்பவர் பரிசீலிக்கப் பட்டனர். இறுதியாக ராதிகா ஆப்தேவை முடிவு செய்துள்ள தாக கூறப்படுகிறது. ராதிகா ஆப்தேவை அணுகி இது சம்பந்தமாக பேசி வருகின் றனர். இவர் ஏற்கனவே தமிழில் 'டோனி', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணைய தளம் மற்றும் வாட்ஸ் அப்களில் சமீபத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அனுராக்காஷ்யம் இயக்கும் ஹாலிவுட் படத்தில் ராதிகா ஆப்தே ஆபாசமாக நடித்த வீடியோ காட்சிகளும் இணைய தளங்களில் பரவியது. இதனை திருட்டுத் தனமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசிலும் புகார் அளிக்கப் பட்டது.
அவரை ரஜினி ஜோடி யாக நடிக்க தேர்வு செய்துள் ளதாக செய்தி பரவி உள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கலையரசன் ஆகியோரும் நடிக்கவிருக்கின்றனர். சமீபத்தில் ஒரு விழாவில் இப்படம் குறித்து ரஜினி மனம் திறந்துள்ளார். இதில் இவர் பேசுகையில் ‘இப்படம் ஆரம்பிக்கும் போதே, மெட்ராஸ் படத்தை போன்று யதார்த்தமாக தான் படம் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.
மேலும், இப்படத்தில் முள்ளும் மலரும் காளி போன்று ஒரு கதாபாத்திரத்தில் ரஜினி தோன்றுவார்’ என ரஞ்சித் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment